நாட்டின் 5-வது 'வந்தே பாரத் ரெயில்' நவம்பர் 10ம் தேதி முதல் சென்னையிலிருந்து இயக்கம்
நாட்டின் 5வது வந்தே பாரத் ரெயில் , நவம்பர் 10 முதல், சென்னையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை,
அதிநவீன வசதிகளுடன் கூடிய நாட்டின் 5வது வந்தே பாரத் ரெயில் , நவம்பர் 10 முதல், சென்னையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் பெங்களுரு வழியாக மைசூர் சென்றடைகிறது.
நாட்டின் 4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி இமாச்சல பிரதேசத்தில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அதன்படி நாட்டின் 5வது வந்தே பாரத் ரெயில் சேவையை நவம்பர் 10ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story