பெண்ணை தாக்கிய தம்பதி கைது


பெண்ணை தாக்கிய தம்பதி கைது
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு: பெண்ணை தாக்கிய தம்பதி கைது

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அடுத்த அரியந்தக்கா கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் மனைவி சிவகாமி(வயது 37). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மனைவி அலமேலு(32) என்பவருக்கும் மகளிர் சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அலமேலுவும், அவரது கணவரும் சேர்ந்து சிவகாமியை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாாின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலமேலு, தங்கதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


Next Story