பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதி கைது


பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதி கைது
x

வடவள்ளியில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

வடவள்ளி, ஜூன்.15-

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது நண்பரை சந்திக்க வடவள்ளியை அடுத்த வேடப்பட்டிக்கு சென்றார். அப்போது அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் அந்த வாலிபரை வழிமறித்தார். இதையடுதது அவர் தனது வீட்டில் அழகான இளம்பெண்கள் உள்ளனர்.பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றார். இதையடுத்து அந்த வாலிபர் சரி என்று கூறி அவருடன் சென்றார். பின்னர் வீட்டையும், இளம்பெண்களையும் பார்த்த அந்த வாலிபர் ஏ.டி.எம். சென்று பணம் எடுத்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார்.

இதையடுத்து அந்த வாலிபர் இதுகுறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த கணபதியை சேர்ந்த 36 வயது பெண்ணையும், ஆவாரம்பாளையத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணையும் போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்களை வைத்து விபசாரம் செய்த வேடப்பட்டியை சேர்ந்த தனசேகரன் (52) மற்றும் அவரது 2-வது மனைவி பூங்கொடி (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story