3 பெண்களிடம் பணம் திருடிய தம்பதி கைது


3 பெண்களிடம் பணம் திருடிய தம்பதி கைது
x

ஓடும் பஸ்சில் 3 பெண்களிடம் பணம் திருடிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

சாயல்குடியை சேர்ந்த தேவி உள்பட 3 பெண்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை திருடி சென்றனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் கொண்ட குழுவினர் தேவி சொன்ன அடையாளங்களுடன் சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் தனியாக நின்று கொண்டிருந்த ஆண், பெண் 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காரியாபட்டியை சேர்ந்த மாசானம் (வயது 36), அவரது மனைவி இசக்கியம்மாள் (34) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். திருடர்களை பிடித்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பாராட்டினார்.



Related Tags :
Next Story