ரூ.1½ கோடி மோசடி வழக்கில் தம்பதி கைது


ரூ.1½ கோடி மோசடி வழக்கில் தம்பதி கைது
x
தினத்தந்தி 25 July 2023 1:15 AM IST (Updated: 25 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் ரூ.1½ கோடி மோசடி வழக்கில் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த பூதிபுரம் பகுதியில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, குலுக்கல் சீட்டு நடத்தி சிலர் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பூதிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்களிடம் சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக 9 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் பூதிபுரத்தை சேர்ந்த சுகன்யா, பொன்ராஜ், தினேஷ் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (53), அவருடைய மனைவி பரமேஸ்வரி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story