அரசு பஸ் மோதி தம்பதி பலி
செக்கானூரணி அருகே அரசு பஸ் மோதி தம்பதி பலியானார்கள்.
செக்கானூரணி,
செக்கானூரணி அருகே அரசு பஸ் மோதி தம்பதி பலியானார்கள்.
துக்கம் விசாரிக்க சென்றனர்
மதுரை மேலபொன்னகரத்தை சேர்ந்தவர் மோகன்(வயது 60). இவருடைய மனைவி பாண்டியம்மாள்(54). இவர்கள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டியில் உள்ள உறவினர் இறப்புக்கு துக்கம் விசாரிக்க நேற்று சென்றனர்.
அங்கு துக்கம் விசாரித்து விட்டு இருவரும் நேற்று மதியம் 2 மணி அளவில் அதே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். செக்கானூரணி அருகே கருமாத்தூரில் வந்த போது பின்னால் வந்த அரசு பஸ் இருசக்கர வாகனம் மீது மோதியது.
தம்பதி பலி
இதில் தடுமாறிய அவர்கள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சின் பின்சக்கரம் அவர்கள் 2 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 2 பேரும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் செக்கானூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து ெதாடர்பாக அரசு பஸ் டிரைவர் சந்தனத்தை கைது செய்தனர். துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் தம்பதி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.