பிளேடால் கழுத்தை அறுத்து கோர்ட்டு ஊழியர் தற்கொலை
பிளேடால் கழுத்தை அறுத்து கோர்ட்டு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் லட்சுமணன் (வயது 53). இவர் சிவகங்கை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கை மற்றும் கழுத்தில் பிளேடால் தன்னைத்தானே அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.. தகவல் அறிந்து எஸ்.எஸ். காலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடிதத்தில் தான் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story