மணப்பாறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன் அனைத்து அரசு, தனியார் பஸ்கள் நின்று செல்ல கோர்ட்டு உத்தரவு


மணப்பாறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன் அனைத்து அரசு, தனியார் பஸ்கள் நின்று செல்ல கோர்ட்டு உத்தரவு
x

மணப்பாறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன் அனைத்து அரசு, தனியார் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்றுதிருச்சி நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி

மணப்பாறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன் அனைத்து அரசு, தனியார் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்றுதிருச்சி நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாக்கல்

மணப்பாறையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் கோர்ட்டுக்கு வரும் ஊழியர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியை சேர்ந்த வக்கீல் விவேக் இதுகுறித்து திருச்சி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், மணப்பாறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைந்துள்ள ஆண்டவர் கோவில் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. இதனால் 2½ கிலோ மீட்டர் தூரம் நடந்தோ அல்லது வேறு வாகனங்கள் மூலமோ வரவேண்டியுள்ளது. இதனால் நீதிமன்றத்துக்கு குறித்த நேரத்துக்கு செல்ல முடிவதில்லை. எனவே அனைத்து பஸ்களும் கோர்ட்டு வளாகம் முன்பு நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நின்று செல்ல...

அந்த மனுவை நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜெயசிங், உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். அப்போது, எதிர்மனுதாரர்களான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக (கும்பகோணம்) லிட் திருச்சி மண்டல பொதுமேலாளர் மற்றும் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் சார்பில் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து "மணப்பாறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைந்துள்ள ஆண்டவர் கோவில் பஸ் நிறுத்தத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் நின்று செல்ல வேண்டும். அதை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக (கும்பகோணம்) லிட் திருச்சி மண்டல பொதுமேலாளர் மற்றும் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story