ஆக்கிரமிப்பு வழக்கில் மதுரை கலெக்டர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு


ஆக்கிரமிப்பு வழக்கில் மதுரை கலெக்டர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
x

ஆக்கிரமிப்பு வழக்கில் மதுரை கலெக்டர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

மதுரையைச் சேர்ந்த பாலமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில், மதுரை பரவை பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களை பணபலம்மிக்க அரசியல் பின்புலம் உள்ள சில தனியார் நிறுவனங்கள், சில நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். அவற்றை அகற்றக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதை விசாரித்த ஐகோர்ட்டு, ஆக்கிரமிப்பு விவகாரத்தில் உரிய நபர்களுக்கு நோட்டீஸ் அளித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது.

அதனடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் பரவையில் குறிப்பிட்ட நிலத்தை தரிசு நிலமாக வகைப்படுத்தி ஊராட்சிக்கு சொந்தமான நிலமாக அதை மாற்றி உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது, ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான நடவடிக்கை. எனவே கோர்ட்டு உத்தரவை முறையாக நிறைவேற்றாத மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் மற்றும் அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Related Tags :
Next Story