சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு குறித்து விரிவான அறிக்கை போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு குறித்து விரிவான அறிக்கை போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x

சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு குறித்து விரிவான அறிக்கை போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சிவசங்கர் பாபா சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி சர்வதேச பள்ளி நடத்தி வருகிறார். இந்தப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுசம்பந்தமாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், செங்கல்பட்டு கோர்ட்டில் 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த குற்றப்பத்திரிகை வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், ''முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக உள்ளது. அரசியல்வாதிகள், பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர்கள், ஊடக விவாதங்கள் ஆகியவற்றின் அழுத்தம் காரணமாக, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் அளித்துள்ள பள்ளியின் முன்னாள் மாணவி, பள்ளியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அதனால், குற்றப்பத்திரிகைகளை ரத்து செய்யவேண்டும்'' என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, சிவசங்கர் பாபா மீது கொடுக்கப்பட்டுள்ள புகார். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்குரிய முகாந்திரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவர் விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story