அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கியை சத்யா ஸ்டுடியோவிடம் வசூலிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கியை சத்யா ஸ்டுடியோவிடம் வசூலிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

அரசு நிலத்திற்கான ரூ.31.09 கோடி குத்தகை பாக்கியை சத்யா ஸ்டுடியோவிடம் வசூலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 1968-ம் ஆண்டு சத்யா ஸ்டுடியோவுக்கு குத்தகைக்கு தந்த 93,540 சதுரஅடி நிலத்தை 2008-ம் ஆண்டு அரசு எடுத்துக்கொண்டது. இந்நிலையில் நிலத்தை மீண்டும் எடுத்த மயிலாப்பூர் வட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்யக் கோரி சத்யா ஸ்டுடியோ தரப்பு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், அரசு நிலத்திற்கான ரூ.31.09 கோடி குத்தகை பாக்கியை சத்யா ஸ்டுடியோவிடம் வசூலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மீட்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்கவும், அந்த நிலத்தில் அரசு திட்டமிட்டபடி இணைப்பு பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Related Tags :
Next Story