நீதிமன்ற ஊழியர்கள் - போலீசாருடன் வாக்குவாதம்,


நீதிமன்ற ஊழியர்கள் - போலீசாருடன் வாக்குவாதம்,
x

நீதிமன்ற ஊழியர்கள் - போலீசாருடன் வாக்குவாதம்,

திருப்பூர்

வீரபாண்டி

திருப்பூர், வீரபாண்டி அடுத்த முருகம்பாளையம் பகுதியில் கனகாசலம் - சிவகாமி என்பவருடைய 3.80 ஏக்கர் நிலத்தை சுப்பிரமணியம் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக 2005 ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த ஒப்பந்தப்படி சுப்பிரமணி, கனகாசலத்திற்கு ஒரு தொகையை கொடுத்துள்ளார். பின்னர் கனகாசலம் அந்த நிலத்தை சுப்பிரமணியத்திற்கு கிரையம் செய்து கொடுக்காமல் தாமதித்து வந்துள்ளார். இதனால் சுப்பிரமணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2014 ம் ஆண்டு நீதிமன்றத்தின் மூலம் சுப்பிரமணி, கனகாசலத்திடம் இருந்து கிரையம் பெற்றுள்ளார். தொடர்ந்து 2016 ம் ஆண்டு அந்த இடத்தை சுவாதீனப்படுத்தி கொடுக்குமாறு சுப்பிரமணியம் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு பின்னர் 2021 ம் ஆண்டு போலீசார் உதவியுடன் நிலத்தை சுவாதீனப்படுத்தி ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கனகாசலத்தின் காலி இடத்தை பயன்படுத்தி வந்த ராஜு என்பவர் விற்பனை செய்யப்பட்ட நிலம் சமந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு கொடுத்த தீர்ப்பின் படி சுப்பிரமணியத்திற்கு நிலத்தை சுவாதீனப்படுத்தி கொடுக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன் படி நீதிமன்ற ஊழியர்கள் பலமுறை வந்து நோட்டீஸ் விநியோகித்தும் ராஜு குடும்பத்தினர் காலி செய்யவில்லை. இந்நிலையில் 4 வது முறையாக நேற்று நீதிமன்ற அமீனா அமல்ராஜ் தலைமையிலான நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் நல்லூர் உதவி கமிஷனர் நந்தினி, வீரபாண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் அவர்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு ஒத்துழைக்காமல் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்திலும், தள்ளுமுள்ளிளும் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசாரின் உதவியோடு சுப்பிரமணியத்தின் இடத்திற்கு சென்ற நீதிமன்ற ஊழியர்கள் அங்கிருந்த பொருட்களை காலி செய்து அந்த இடத்தை சுப்பிரமணியின் வசம் சுவாதீனப்படுத்தி கொடுத்தனர். இதனால் அங்கு பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

--


Next Story