மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்


மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்
x

பாளையங்கோட்டை அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியில் நேற்று மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டிகளை பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த போட்டி பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவுகளாகவும், குதிரை வண்டி போட்டி தனியாகவும் நடத்தப்பட்டது.

இதில் காளைகள் மற்றும் குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இதில் பெரிய மற்றும் சின்ன மாட்டு வண்டிகளுக்கான போட்டிகளில் முதலிடங்களை சீவலப்பேரி துர்க்காம்பிகை குரூப் மாட்டு வண்டி பிடித்து வெற்றி பெற்றது. குதிரை வண்டி பந்தயத்தில் டவுன் வயல் தெரு மாடத்தான் என்பவரது வண்டி முதலிடத்தை பிடித்தது. முடிவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் பாளையங்கோட்டை தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் போர்வெல் கணேசன், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணவேணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story