மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 22 Jun 2022 12:05 AM IST (Updated: 22 Jun 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே மணல்மேல்பட்டி கிராமத்தில் உள்ள வேலங்குடி சாம்பிராணி கருப்பர் கோவில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 60 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 19 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மேலவளவு பன்னீர்செல்வம் வண்டியும், 2-வது பரிசை விராமதி கருப்பையா வண்டியும், 3-வது பரிசை மணல்மேல்பட்டி கருப்பையா வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பிரிவில் 41 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை பொய்கரைபட்டி பாலு வண்டியும், 2-வது பரிசை கண்டவராயன்பட்டி முரசு வண்டியும், 3-வது பரிசை காரைக்குடி கருப்பண்ணன் வண்டியும் பெற்றது. 2-வது பரிவில் முதல் பரிசை பரளி செல்வி வண்டியும், 2-வது பரிசை மாவூர் ராமச்சந்திரன் வண்டியும், 3-வது பரிசை நெற்புகப்பட்டி முத்தையா வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story