மின்சாரம் தாக்கி பசு மாடு சாவு
மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி பசு மாடு இறந்தது.
மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர், நீடூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 65). இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று நீடூர் மெயின் ரோட்டில் உள்ள மின்மாற்றியின் அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மின்சாரம் தாக்கி பசு மாடு தூக்கிவீசப்பட்டது. இதனையடுத்து அந்த பசு மாட்டிற்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பசுமாடு நேற்று முன்தினம் இறந்தது. இந்த சம்பவம் குறித்து பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து அடிக்கடி மின் கசிவு ஏற்பட்டு விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல்தடுக்க மின்சார வாரியத்தினர் அவ்வப்போது பழுது நீக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.