பள்ளத்தில் விழுந்த பசுமாடு மீட்பு
பள்ளத்தில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
திருவாரூர்
மன்னார்குடி நகரின் 3-ம் தெரு மற்றும் 2-ம் தெரு ஆகிய தெருக்களுக்கு இடையே கழிவு நீர் செல்வதற்கான பாதை உள்ளது. இந்த பாதையில் உள்ள ஒரு பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு பசுமாடு ஒன்று இந்த நீர் நிரம்பிய பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்து விட்டது. அந்த பசுமாடு பள்ளத்தில் இருந்து வெளியே வர முடியாமல் சத்தம் போட்டுள்ளது. சத்தத்தை கேட்ட அந்த பகுதியை சேர்ந்த டாக்டர் செங்குட்டுவன் மனைவி மணிமேகலை அங்கு சென்று பார்த்தபோது பள்ளத்தில் பசுமாடு விழுந்து கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அங்கு விரைந்து சென்று பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
Related Tags :
Next Story