மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x

மணல் குவாரி அமைக்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

முற்றுகை போராட்டம்

அறந்தாங்கி வருவாய் கோட்டத்தில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் நேற்று அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தை மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஆவுடையார்கோவில் அருகே உள்ள பரமந்தூரில் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி மணல் குவாரி அமைத்து தரப்படும் என கோட்டாட்சியரிடம் தொலைபேசி வாயிலாக கனிமவளத்துறை அதிகாரி அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.

மணல் அள்ளுவார்கள்

மேலும் அறந்தாங்கி, மணமேல்குடி பகுதிகளிலும் மாட்டுவண்டி மணல் குவாரி அமைத்துதர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் செப்டம்பர் 6-ந் தேதி அறந்தாங்கி மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதிகளில் தன்னிச்சையாக மாட்டுவண்டியில் மணல் அள்ளும் தொழிலாளர்கள் மணல் அள்ளுவார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

1 More update

Next Story