மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன
ராயக்கோட்டை அருகே மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன.
ராயக்கோட்டை
ராயக்கோட்டை அருகே மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன.
2 மாடுகள் செத்தன
ராயக்கோட்டை அருகே உள்ள திம்ஜேப்பள்ளி ஊராட்சி பாவாடரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கட்டசாமி, இவரது தம்பி சின்னசாமி. விவசாயிகள் இவர்கள் தங்களது மாடுகளை கொட்டகையில் கட்டி இருந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு ராயக்கோட்டை பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது வெங்கட்டசாமி, சின்னசாமி ஆகியோரது மாட்டு கொட்டகை மீது மின்னல் தாக்கியது. இதில் கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2 மாடுகள் செத்தன. இதை கண்டு அண்ணன், தம்பிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிவாரணம் வழங்க பரிந்துரை
இதையடுத்து அவர் கால்நடை மருத்துவர் வெங்கட்சுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து மின்னல் தாக்கி இறந்துபோன மாடுகளை பிரேத பரிசோதனை செய்தார். இதையடுத்து 2 மாடுகளும் குழி தோண்டி புதைக்கப்பட்டன. தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தாசில்தாருக்கு பரிந்துரை செய்வதாக கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்தார். மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.