பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்


பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்
x

பொய்கை வாரச்சந்தையில் நேற்று விற்பனைக்கு அதிக அளவில் மாடுகள் குவிந்தன.

வேலூர்

வேலூரை அடுத்து பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சென்னை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகள் கொண்டுவரப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று நடந்த சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் 1,500-க்கும் மேற்பட்ட கறவைமாடுகள் விற்பனைக்காக வந்தன. இதனால் அதிகளவில் வெளி ஊரில் இருந்து வியாபாரிகள் பொய்கை மாட்டுச் சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த 2 வாரங்களாக மாடுகள் வரத்து குறைவாக காணப்பட்டன. ஆனால் இந்த வாரம் 1,500-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்ததால் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மாடுகளை வாங்கிச் சென்றனர். வாரத்திற்கு ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் ஈட்டி தரும் பொய்கை வார சந்தையில் இந்த வாரம் வர்த்தகம் நன்றாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.



Next Story