சீனாபுரம் சந்தையில் ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனை
சீனாபுரம் சந்தையில் ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனையானது.
பெருந்துறை
சீனாபுரம் சந்தையில் ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனையானது.
மாட்டு சந்தை
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் மாட்டுச்சந்தை நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.
இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 100-ம், அதே இன கிடாரிக்கன்றுகள் 120-ம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன. இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 125-ம், அதே இன கிடாரி கன்றுகள் 150-ம் விற்பனைக்கு வந்திருந்தன.
ரூ.1½ கோடிக்கு...
விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும் விற்பனையானது.
சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்பனையானது.
நேற்று முன்தினம் நடந்த சந்தையில் மாடுகள் மற்றும் கன்றுகள் ரூ.1½ கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர்.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.