பட்டாசு ஆலை போர்மேன் கைது
பட்டாசு ஆலை போர்மேனை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
சிவகாசி
சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் இயங்கி வந்த பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்றுமுன்தினம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ஆலையில் பணியாற்றி வந்த கருப்பசாமி, தங்கவேல் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மேலும் கருப்பம்மாள், மாரித்தாய் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து ஆனையூர் கிராம நிர்வாக அலுவலர் ஹரிச்சந்திரன் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் ஆலையின் உரிமையாளர் பிரவீன்ராஜா, போர்மேன் சதீஷ்குமார் (வயது31) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story