ஆனந்த காவேரி வாய்க்கால் கரை சாலையில் விரிசல்


ஆனந்த காவேரி வாய்க்கால் கரை சாலையில் விரிசல்
x

ஆனந்த காவேரி வாய்க்கால் கரை சாலையில் விரிசல்

தஞ்சாவூர்

பூதலூர் ஒன்றியம் மாரநேரி கிராமத்திலிருந்து கல்லணை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மாரநேரி கிராமத்தில் இருந்து செல்லும் வழியில் ஆனந்த காவேரி கால்வாய் கரையோரத்தில் சாலை வாய்க்காலில் சரிந்து விழ தொடங்கியது. இதனால் அந்த இடத்தில் நீண்ட கம்புகளை நட்டு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் கல்லணைக்கும், திருக்காட்டுப்பள்ளிக்கும், ஒரத்தூர், சோளகம்பட்டிக்கும், இந்தளூர் திருவெறும்பூருக்கும் சென்று வருகின்றன. சாலை சரிந்து விழுந்த இடத்தில் மணல் முட்டைகள் அடுக்கப்பட்டு, நீண்ட கம்பு ஊன்றி சிவப்பு துணியை கட்டி உள்ளனர். சாலை மேலும் சரிந்து விழும் அபாயநிலை உள்ளது. தற்போது ஆனந்த காவேரி வாய்க்காலில் தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் வாய்க்கால் கரை சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை கரையோரத்தில் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகளை அகற்றி நிரந்தரமாக தடுப்புச் சுவர் கட்டி விரிசல் ஏற்பட்ட சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story