திருச்செங்கோட்டில் கிரேன் விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு கிரேன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கிரேன் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இந்த ஊர்வலத்தை குற்றவியல் வக்கீல் சரவணராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்செங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையம், நாமக்கல் ரோடு, வாலரை கேட் உள்பட முக்கிய பகுதிகள் வழியாக சென்று, மீண்டும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தின் போது சாலை விதிகளை முழுமையாக கடைபிடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story