உழவு செய்த வயலில் இரை தேடிய கொக்குகள்
கோட்டூர் அருகே உழவு செய்த வயலில் இரை தேடிய கொக்குகள்
திருவாரூர்
கோட்டூர்:
கோட்டூர் அருகே குன்னியூர் பகுதியில் குறுவை அறுவடை செய்து உழவு செய்த வயலில் இரை தேடி கொக்குகள் கூட்டம் கூட்டமாக வந்து மேய்கின்றன. இந்த காட்சியை அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இது குறித்து அங்கிருந்த விவசாயி கூறுகையில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதங்களில் இதே மாதிரி கூட்டம் கூட்டமாக கொக்குகள் மற்றும் பல பறவைகள் வந்து வயல்களில் மேய்வதை பார்க்கலாம். இவைகள் இரவு நேரங்களில் அரிச்சந்திரா நதி கரையில் உள்ள மரங்களில் தங்கி மறுநாள் இந்த பகுதிக்கு வந்து மேய்ந்து செல்கின்றன. இதனால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இங்கு பறவைகளை பார்க்கலாம் என்றார்.
Related Tags :
Next Story