தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்


தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்றிதழை ஆணையர் வழங்கினார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்ற வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை தாங்கினார். மேலாளர் (பொறுப்பு) ரமேஷ் முன்னிலை வகித்தார். துப்புரவு பணி மேற்பார்வையாளர் கலியபெருமாள் வரவேற்றார். இதில் சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் கலந்துகொண்டு பேசுகையில், மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் பினையில் வர முடியாத தண்டனை வழங்க சட்டம் உள்ளது. 2 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். எனவே அனைவரும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தானியங்கி கழிவு நீர் அகற்றும் வாகனத்தை பயன்படுத்த வேண்டும். நகராட்சி மற்றும் மோட்டார் வாகன அலுவலகத்தில் பதிவு பெற்ற கழிவு நீர் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் நகராட்சி ஊழியர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story