அனைத்து வங்கிகள் சார்பில் 1,797 பயனாளிகளுக்கு ரூ.79.91 கோடி கடன் உதவிகள் கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்


அனைத்து வங்கிகள் சார்பில்  1,797 பயனாளிகளுக்கு ரூ.79.91 கோடி கடன் உதவிகள்  கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்
x

அனைத்து வங்கிகள் சார்பில் 1,797 பயனாளிகளுக்கு ரூ.79.91 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.

தர்மபுரி

தர்மபுரி:

அனைத்து வங்கிகள் சார்பில் 1,797 பயனாளிகளுக்கு ரூ.79.91 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.

கடன் வழங்கும் விழா

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் 75-வது சுதந்திர தின விழா சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வங்கிகள் சார்பில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.பி., வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலெக்டர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அனைத்து வங்கிகளும் உறுதுணையாக இருந்து விவசாயிகள், புதிய தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிகளவில் வங்கி கடன் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்று கூறினார்.

பாராட்டு கேடயம்

விழாவில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் வேளாண் சார்ந்த கடன் உதவிகள் சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடன் உதவிகள், வீட்டு கடன்கள், வாகன கடன்கள் மற்றும் இதர தனி நபர் கடன் உதவிகள் என மொத்தம் 1,797 பயனாளிகளுக்கு ரூ.79.91 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் கடன் உதவிகள் வழங்கி சிறப்பிடம் பெற்றமைக்காக இந்தியன் வங்கிக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் தர்மபுரி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று பல்வேறு தொழில்களை சிறப்பாக மேற்கொண்டு வரும் 7 பேருக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ராஜா, இந்தியன் வங்கியின் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அசோகன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரவீன் பாபு, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, கவுரி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.


Next Story