செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வசதி சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்


செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வசதி சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வசதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் ஆண்டு தோறும் தமிழகத்தை சேர்ந்த சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினமக்களுக்கு கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் கல்விகடன், தனிநபர் கடன், சுயஉதவிக்குழுவினருக்கான சிறுதொழில் கடன் வழங்குதல் போன்றவை பற்றிய சிறப்பு முகாம்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் கீழ்கண்ட வட்டங்களில் பின்வரும் தேதிகளில் நடைபெற உள்ளது.

வண்டலூரில் வருகிற 12-ந்தேதி, செங்கல்பட்டு வட்டத்தில் 24-ந் தேதி, திருப்போரூரில் அடுத்த மாதம் 13-ந்தேதி, மதுராந்தகம் வட்டத்தில் அடுத்த மாதம் 21-ந்தேதி மற்றும் செய்யூர் வட்டத்தில் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி பல்லாவரம் வருகிற அக்டோபர் மாதம் 4-ந்தேதி போன்ற நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் (கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபின மக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story