முதல்-அமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட்


முதல்-அமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட்
x

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பொதுப்பிரிவில் ஆண்களுக்கான பிரிவில் 14 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி மாவட்ட விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை நடந்தது. இதே விளையாட்டரங்கில் இன்று (திங்கட்கிழமை) அரசு ஊழியர்களுக்கான தடகளம், கபடி, வாலிபால், இறகுபந்து, செஸ் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், இறகுபந்து, கபடி, எறிபந்து ஆகிய விளையாட்டு போட்டிகளும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான டேபிள் டென்னிசும், மாணவிகளுக்கான வளைகோல் பந்தும் நடக்கிறது.

1 More update

Next Story