கிரிக்கெட் போட்டி


கிரிக்கெட் போட்டி
x

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அரியலூர்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இரண்டு முறை விளையாட வேண்டும். இதில் அதிக புள்ளிகள் பெறும் முதல் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றனர். இதன் இறுதிப்போட்டி சென்னையில் மே மாதம் நடைபெற உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் தமிழ்நாடு, கேரளா அணிகள் மோதியதில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அணிகள் மோதும் முதல் போட்டி அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள சுவாமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு அணி கேப்டன் ராஜ் மகேஸ்வரன் மற்றும் பாண்டிச்சேரி அணி கேப்டன் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் பாண்டிச்சேரி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய தமிழக அணி 40 ஓவர்களில் 372 ரன்கள் பெற்றது.

இதில் அதிகபட்சமாக சன் மேக்கர் 160 ரன்களும், ரமேஷ் 50 ரன்களும் எடுத்தனர். பாண்டிச்சேரி அணிக்காக விஜயகாந்த் 4 விக்கெட்களை எடுத்தார். பின்பு ஆடிய பாண்டிச்சேரி அணி 32 ஓவர்களில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக கோவிந்தராஜ் 25 ரன்களும், குணசீலன் 28 ரன்களும் எடுத்தனர். தமிழ்நாடு அணிக்காக ஹரிஷ் 4 விக்கெட்டுகளும், கவுதம் மற்றும் யுவராஜன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர். வெற்றி பெற்ற தமிழக அணியில் ஆட்டநாயகன் விருதை சன்மேக்கர் பெற்றார். இத்தொடரில் தமிழக அணி 2-2 வெற்றி பெற்று தற்போது முன்னிலையில் இருந்து வருகிறது.


Next Story