கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா


கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
x
தினத்தந்தி 28 Feb 2023 6:45 PM GMT (Updated: 28 Feb 2023 6:46 PM GMT)

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் லீக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சங்க துணை தலைவர் டாக்டர் பரூக் அப்துல்லா தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் அருண்குமார் வரவேற்றார். செயலாளர் மாரீசுவரன் ஆண்டறிக்கை வாசித்தார். லீக் போட்டிகளுக்கான அறிக்கையை ஞானசேகர், ஜெயமுத்துராமலிங்கம் ஆகியோர் வாசித்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை மேலாளர் காசி விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அணியினர் மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ரமேஷ்பாபு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். முடிவில் சங்க செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் நன்றி கூறினார்.


Next Story