பொதுமக்களுக்கு குற்ற விழிப்புணர்வு கூட்டம்

பொதுமக்களுக்கு குற்ற விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திருச்சி
திருச்சி மாநகரம் கண்டோன்மெண்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையம் சார்பில் கருமண்டபம் பகுதியில் பொதுமக்களுக்கு குற்ற விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கருமண்டபம் கல்யாண சுந்தரம் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு கண்டோன்மெண்ட் உதவி போலீஸ் கமிஷனர் அஜய்தங்கம் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வரவேற்று பேசினார். திருச்சி தெற்கு துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, குற்றங்கள் நடைபெறும் முன்பு எப்படி தடுக்க வேண்டும். பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.
Related Tags :
Next Story






