நாகர்கோவிலில் குற்றத்தடுப்பு மாதாந்திர கூட்டம்; போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது


நாகர்கோவிலில் குற்றத்தடுப்பு மாதாந்திர கூட்டம்; போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
x

நாகர்கோவிலில் குற்றத்தடுப்பு மாதாந்திர கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் குற்றத்தடுப்பு மாதாந்திர கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.

குற்றத்தடுப்பு கூட்டம்

குமரி மாவட்ட போலீஸ் சார்பில் மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசியதாவது:-

கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை புழக்கம் மாவட்டத்தில் அறவே இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் நபரின் வங்கி கணக்குகள் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரின் வீடு சோதனையிடப்பட்டு வழக்குக்கு தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட வேண்டும். ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்தவிதமான பாரபட்சமும் இருக்கக் கூடாது. போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்‌. கந்து வட்டி தொடர்பான வழக்குகளில் உடனுக்குடன் விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவுகள் பதிவிடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் சைபர் மோசடிகளில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி சிறப்பான முறையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும் என கூறினார்.

இதில் அரசு குற்ற வக்கீல்கள், மருத்துவ அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர், சிறை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.


Next Story