குற்றங்களை குறைப்பதை விட தடுக்க வேண்டும்


குற்றங்களை குறைப்பதை விட தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குற்றங்களை குறைப்பதை விட தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் நடந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் அறிவுறுத்தியதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தெரிவித்தார்.

சிவகங்கை

ஆலோசனை கூட்டம்

மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு முதல்-அமைச்சர் தலைமையில் 2 நாட்கள் சென்னையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் சேர்ந்து ஒருநாள் கூட்டமும், போலீஸ் மற்றும் சூப்பிரண்டுகளுக்கு மட்டும் ஒரு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் சட்டமன்ற பாதுகாப்பது கூட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்திற்கு பின்பு சிவகங்கை வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கூட்டத்தில் நடந்த ஆலோசனைகள் தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

குற்றங்களை தடுக்க

போலீஸ் சூப்பிரண்டுகள் குற்றங்களை குறைப்பதை விட அதை நடைபெறாமல் தடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் கூட்டத்தில் நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story