நீதித்துறை, காவல்துறையை பற்றி அவதூறாக பேசியபோலீஸ்காரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வக்கீல்கள் புகார் மனு


நீதித்துறை, காவல்துறையை பற்றி அவதூறாக பேசியபோலீஸ்காரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வக்கீல்கள் புகார் மனு
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீதித்துறை, காவல்துறையை பற்றி அவதூறாக பேசிய போலீஸ்காரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வக்கீல்கள் புகார் மனு அளித்தனா்.

விழுப்புரம்


விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் வக்கீல்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நெய்வேலி என்.எல்.சி.க்காக விவசாய பயிர்களை கனரக வாகனங்களை கொண்டு அழித்தபோது அழுகை வந்ததாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வேதனை தெரிவித்திருந்தார். இதனை வரவேற்கும் விதமாக, விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வக்கீல் பிரபாகரன் என்பவர் வாட்ஸ்-அப் குழு ஒன்றில் கருத்து பதிவிட்டிருந்தார். அந்த குழுவில் இடம்பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டம் நல்லாண்பிள்ளை பெற்றால் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் சிவசங்கர் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மட்டுமின்றி, ஒட்டுமொத்த வக்கீல்களையும், தமிழ்நாடு பார் கவுன்சிலையும் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளையும் மிகவும் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் திட்டி, ஆடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த 2009-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் நடந்த தாக்குதலின்போது நாங்கள்தானே களத்தில் நின்றோம். உங்கள் மூத்த வக்கீல்கள் என்ன செய்தார்கள் என்றும், அதுபோல் தற்போது என்.எல்.சி. போராட்டத்தின்போது, நாங்கள்தானே களத்தில் நின்றோம் என்ற அடிப்படையில் போலீஸ்காரர் சிவசங்கர் தனது ஆதங்கத்தை வாட்ஸ்-அப் குழுவில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை நீக்கக்கூறியும், அவர் நீக்க மறுத்துள்ளார். எனவே போலீஸ்காரர் சிவசங்கர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து, துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் அதிகாரிகள், இதுகுறித்து விசாரிப்பதாக கூறினர்.


Next Story