குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு முழுவதும் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறை இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவின் பேரில் மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு விஜய கார்த்திக் ராஜ் கண்காணிப்பில், மதுரை சரக துணை சூப்பிரண்டு ஜெகதீசன் மேற்பார்வையில் சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் திருமாஞ்சோலையில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் எதுவும் நடைபெறுகிறதா? என திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த விவசாயிகளிடம் தவறு ஏதும் நடைபெறுகிறதா என்றும் கேட்டறிந்தனர்.
இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் கூறியதாவது:- நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெற்றால் அதுகுறித்து தகவல் தெரிவிக்கும் வகையில் 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.