தாய்-மகள் இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்- போலீஸ் டி.ஐ.ஜி. துரை தகவல்


தாய்-மகள் இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்- போலீஸ் டி.ஐ.ஜி. துரை தகவல்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:44+05:30)

தாய்-மகள் இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீஸ் டி.ஐ.ஜி. துரை கூறினார்.

சிவகங்கை

சிவகங்கை,

ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. துரை சிவகங்கை வருகை தந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், தேவகோட்டை துணை போலீஸ் சூப்பரண்டு கணேஷ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் டி.ஐ.ஜி. துரை நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்த கண்ணன் கோட்டை கிராமத்தில் கனகம் (வயது65) அவரது மகள் வேலுமதி (35) ஆகியோரை கொலை செய்து தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.அவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் அது குறித்து என்னிடமோ அல்லது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இந்த சம்பவத்தில்ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உடன் இருந்தார்.


Next Story