கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் தர்ணா


கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் தர்ணா
x

கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் தர்ணா

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று என்று கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் தர்ணா செய்து மனு கொடுத்து முறையிட்டனர்.

கிறிஸ்தவர்கள் தர்ணா

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் கிறிஸ்தவ முன்னணி இயக்கம், கிறிஸ்தவ கூட்டமைப்பினர் சார்பில் திரளானவர்கள் வந்து கூட்ட அரங்குக்கு முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க அழைத்துச்சென்றனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்ட மக்கள் தொகையில் சிறுபான்மையினர் சரிபாதி எண்ணிக்கையில் வசித்து வருகிறோம். ஆனால் சமீபகாலகமாக சிறுபான்மையின மக்கள் மீது, மாற்று மத அமைப்பினர் வேண்டும் என்றே பிரச்சினை செய்து வருகின்றனர். கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள் புகுந்து மிரட்டுவது, ஜெபவீடுகள் அனுமதி பெற்று நடக்கிறதா? என்று கேட்டு துன்புறுத்துகிறார்கள். ஆளில்லாத நேரத்தில் ஜெபவீடுகளை தாக்கி பொருட்களை சேதப்படுத்துகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும், வழிபாட்டு உரிமையும் முற்றிலும் மறுக்கப்படுகிறது என்பதே நிதர்சன உண்மை.

பாதுகாப்பு

போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தாலும் போலீசார் வந்து விசாரணை நடத்தி ஜெபவீடுகளை நடத்தக்கூடாது என்கிறார்கள். வெளிநபர்கள் வந்து பிரார்த்தனை செய்யக்கூடாது என்கிறார்கள். பல சபைகளுக்கு கலெக்டரிடம் கட்டிடம் கட்ட வழிபாடு நடத்த அனுமதி கொடுக்கப்பட்ட மனுக்கள் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேலும் கிறிஸ்தவர்கள் வீடு கட்ட ஊராட்சி மற்றும் நகராட்சி, மாநகராட்சிகளில் அனுமதி கேட்டால் வீடுதான் கட்டுகிறேன். வழிபாடு நடத்த மாட்டேன் என்று எழுதிக்கேட்கிறார்கள்.

வாடகை கட்டிடத்தில் நாங்கள் வழிபாடு நடத்தினால் வாடகை கட்டிடத்தை காலி செய்ய சொல்கிறார்கள். கிறிஸ்தவர்களின் உயிருக்கும், வழிபாட்டு உரிமைக்கும் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


-


Next Story