பாபநாசம் அணையில் ராட்சத முதலை


பாபநாசம் அணையில் ராட்சத முதலை
x

பாபநாசம் அணையில் ராட்சத முதலை நீந்தி வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் அணையில் ராட்சத முதலை நீந்தி வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பாபநாசம் அணை

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை உள்ளது. இந்த அணை நெல்லை, தூத்துக்குடி உள்பட தென் மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய அணையாக விளங்குகிறது.

மேலும் இந்த அணையில் முதலைகளும் காணப்படுகிறது. இதனால் அணையின் அருகே முதலைகள் இருப்பது குறித்து எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் குறைவாக இருக்கும் போது முதலைகள் அவ்வப்போது காணப்படுகின்றன.

ராட்சத முதலை

இந்த நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் சுமார் 77 அடிக்கு குறைந்து காணப்படுகிறது. அணைப் பகுதியில் சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று தண்ணீரில் நீந்திச் சென்றது.

இதனை அவ்வழியாக சென்ற பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story