விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வேண்டும்


விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வேண்டும்
x
தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:45 PM GMT)

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

பயிர் காப்பீடு

கிராம நிர்வாக அலுவலர்விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அருள்ராஜ் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா நெல் பயிர் காப்பீடு திட்டத்தில் இந்த ஆண்டு தற்போதுவரை இயற்கையின் சீற்றத்தின் காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 40 சதவீதம் விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

பல மாவட்டங்களில் விவசாயிகள் இயற்கையின் காரணமாக நடவு மற்றும் விதைப்பு பணிகளை தாமதமாக மேற்கொள்ள நேரிட்டதாலும், மழையின் காரணமாகவும், பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இயலவில்லை என தெரிய வருகிறது.

கால அவகாசம்

தற்போது விவசாயிகள் நெல்பயிர் காப்பீடு பதிவு செய்ய உள்ள கால அவகாசம் வருகிற 15-ந் தேதியோடு முடிவடைவது என்பது விவசாயிகளுக்கு பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

எனவே விவசாயிகள் மீது அக்கறை கொண்டு, தமிழக அரசு தற்போது உள்ள கால அவகாசத்தை இம்மாதம் இறுதியான 30-ந் தேதி வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story