விவசாயிகளுக்கு பயிர் கடன்


விவசாயிகளுக்கு பயிர் கடன்
x

கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய பகுதியில் குறுவை சாகுபடி முடிந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் சம்பா சாகுபடி காண பணிகள் தீவிரமடைந்து வருகிறது.அதற்காக கீழையூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் சம்பா சாகுபடிக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் 130 பேருக்கு ரூ.51 லட்சத்து 39 ஆயிரத்து 588-க்கான காசோலையை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழங்கினர்.


Next Story