விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி
விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி
நீலகிரி
கோத்தகிரி
கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை(அட்மா) திட்டத்தின் கீழ் அரக்கம்பை கிராமத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பயிற்சி பள்ளி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை தாங்கினார். இதில் ஊட்டி மண் பரிசோதனை நிலைய அலுவலர்கள் கலந்துகொண்டு மண்வள மேலாண்மை மற்றும் மண் மாதிரி சேகரிப்பு முறைகள் குறித்து விளக்கி பேசினார்கள். மேலும் அட்மா திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு உழவன் செயலியின் பயன்பாடு மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப பயிற்சிகள் குறித்து விளக்கி பேசினர். இந்த பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Related Tags :
Next Story