பயிர்களை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்ய வேண்டும்


பயிர்களை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்ய வேண்டும்
x

பயிர்களை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்ய வேண்டும்

திருவாரூர்

மண்ணின் வகைக்கேற்ப பயிர்களை தேர்ந்்தெடுத்து சாகுபடி செய்ய வேண்டும் என வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

உலக மண்வள தினம்

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் செல்வமுருகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பூமியில் மண்ணின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5-ந்தேதி "உலக மண்வள தினம்" அனுசரிக்கப்படுகிறது. மண்ணில் வேதியியல் உரங்களை பரிந்துரைத்த அளவை விட அதிகம் பயன்படுத்துவதால் மண் பாதிப்படைகிறது. ஒரு கிராம் வேதியியல் உரங்களும், பூஞ்சாண மற்றும் பூச்சி மருந்துகளும், பயிருக்கும், மண்ணிற்கும், மனிதனுக்கும் மிகுந்த கேடு விளைவிக்கும். இது மட்டுமின்றி மண்ணில் இறுக்கம் அதிகரித்தல், நீர் உட்புகுதிறன் குறைதல், மேல்மண் உப்பு படிதல், அமில காரத்தன்மையில் வேறுபாடு காரணமாக மண்ணின் கட்டுமானம் சிதையும்.போதிய அளவு வடிகால் வசதியில்லாமல், பள்ளக்கால் பகுதிகளில் களர், உவர் நிலம் போன்ற பல்வேறு காரணங்களாலும், மண்ணின் வளம் குறைந்து மகசூல் பாதிக்கப்படுகிறது.

மண்ணின் வகைக்கேற்ப பயிர்களை

மண் பரிசோதனை செய்து, தேவைக்கேற்ப ரசாயன உரங்களை இட வேண்டும். காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணை வளப்படுத்தும் உயிர் விதைநேர்த்தி செய்ய வேண்டும். தொழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் தழை உரங்களை போதிய அளவு இடவேண்டும். மண் பரிசோதனை மூலம், மண்ணில் உள்ள உவர் அமிலத்தன்மையை நீக்கி, மண் மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். போதுமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மண்ணின் வகைக்கேற்ப பயிர்களை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்ய வேண்டும். மண்வளத்தை பாதுகாத்து பயிர் செய்தால் மண் வளத்தை பேணி பாதுகாக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story