சாலை போடாமலேயே கோடிக்கணக்கில் பணம் கையாடல்? முதல்-அமைச்சர் விளக்கம் அளிப்பாரா? - டி.டி.வி. தினகரன்


சாலை போடாமலேயே கோடிக்கணக்கில் பணம் கையாடல்? முதல்-அமைச்சர் விளக்கம் அளிப்பாரா? - டி.டி.வி. தினகரன்
x
தினத்தந்தி 8 Oct 2022 4:13 PM IST (Updated: 8 Oct 2022 4:16 PM IST)
t-max-icont-min-icon

முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு ரூ.100 கோடிக்கு மேல் டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது என டி.டி.வி. தினகரன் தெரிவித்தள்ளார்.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

கரூரில் சாலை போடாமலேயே தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வெளியாகியிருக்கும் புதிய ஆதாரங்கள் குறித்து, முதல்-அமைச்சர் ஸ்டாலினும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் உரிய விளக்கம் அளிப்பார்களா?

அதுமட்டுமில்லாமல் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திற்கே ரூ.100 கோடிக்கு மேல் டெண்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது தி.மு.க ஆட்சியில் எந்த அளவிற்கு ஊழல் மலிந்து போயிருக்கிறது என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது.

'சர்க்காரியா புகழ்' தி.மு.க.வினர் கரூரில் சாலை போடாமலேயே மக்கள் பணத்தை சுரண்டியதைப் போல இன்னும் என்னென்ன திருவிளையாடல்களை அரங்கேற்றுகிறார்களோ.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




1 More update

Next Story