போலீஸ் டி.ஐ.ஜி. தலைமையில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


போலீஸ் டி.ஐ.ஜி. தலைமையில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் டி.ஐ.ஜி. தலைமையில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை, மே.18-சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. துரை கலந்து கொண்டு பொதுமக்களிடம் போலீஸ் துறை தொடர்பான புகார் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டரின் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் நேரடியாக பெறப்பட்ட மனுக்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு நேரடி தீர்வு காணப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story