சிவகங்கையில் 26-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


சிவகங்கையில் 26-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் 26-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

சிவகங்கை


சிவகங்கையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். கூட்டத்திற்கு கலெக்டர் தலைமை தாங்குகிறார். மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.


Next Story