பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மன்ற கூட்டம்


பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மன்ற கூட்டம்
x
நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர் வரவேற்றார். மாநில பொருளாளர் முருக செல்வராசன், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட செயலாளர் சங்கர் வேலை அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் சாதாரண நிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும். மாணவர்களின் கல்வி நலன் கருதி காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட காலி பணியிடங்களை விரைந்து நிரப்பி விட வேண்டும். தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் வடிவேல் நன்றி கூறினார். கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story