சூளகிரியில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


சூளகிரியில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 6:44 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியக்குழுவின் சிறப்புக்கூட்டம், கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், விமல் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், ஒன்றிய பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற கவுன்சிலர்கள், தங்கள் வார்டு பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் பேசினர். மேலும் உறுப்பினர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


Next Story