தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்புமுன்களப்பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப்பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜெயவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுதா வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் சதீஷ், துணை செயலாளர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்கள பணியாளர்களுக்கு விடுமுறையுடன் கூடிய மாதஊதியம் ரூ.22 ஆயிரம் வழங்க வேண்டும். பணி வரன்முறை மற்றும் பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி பணி வழங்கிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சென்று முதல்-அமைச்சரை நேரில் சந்திப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்கள பணியாளர்கள் கலந்து கொண்டனர்.