நாமக்கல்லில்ரேஷன்கடை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்


நாமக்கல்லில்ரேஷன்கடை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
x
நாமக்கல்

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன் வரவேற்றார். துணைத்தலைவர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் நடராஜன், அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :- பொது வினியோகத்திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், சரியான எடையில் பொட்டலம் வழங்க வேண்டும். சரியான எடையில் வழங்காமல், ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும். மகளிர் சுயஉதவிக்குழு ரேஷன் கடைகளை அரசே ஏற்று நடத்தி, அப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அரிசி கடத்தலை தடுப்பதற்கு ஏதுவாக, எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதை அறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம், அனைத்து வகையான நோய்களுக்கும், அனைத்து வகை மருத்துவமனைகளிலும் மருத்துவம் பார்ப்பதற்கு காப்பீட்டு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்பது உள்பட 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story