சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் நடந்தது.

திருச்சி

சமயபுரம்:

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்களிலும், பாத யாத்திரையாகவும் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள். இந்நிலையில், அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் சமயபுரம் வந்தனர். அவர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அக்னி சட்டி ஏந்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து கோவிலை வலம் வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோவிலுக்கு முன்புறமும், விளக்கு ஏற்றும் இடத்திலும் விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் கோவிலின் தனியார் நிறுவன காவலர்கள் ஈடுபட்டனர்.


Next Story